முதலாளியின் மனைவியை, வேலைக்காரன் பலாத்காரம் செய்ய முயன்ற போது, அது தோற்றப்போனதால், விரக்தியடைந்து அந்த பெண்ணை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தானே பகுதியில் உள்ள டோம்பிவலியில் ஒரு தம்பதியினர் இருவருமாகச் சேர்ந்து ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகின்றனர். அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் 20 வயதான ரஞ்சன் என்ற இளைஞன் வேலைப் பார்த்து வந்தான்.

இப்படியான சூழ்நிலையில், கடையின் முதலியின் மனைவி மீது வேலைக்கார இளைஞனான அந்த 20 வயதான ரஞ்சனுக்கு ஒரு கண் இருந்து உள்ளதாகத் தெரிகிறது.

இதனால், முதலியின் மனைவியை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி அவன் காத்து கொண்டு இருந்துள்ளான்.

அதன் படி, கடந்த 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு, அந்த கடையின் முதலாளியும் அவருடைய மனைவியும் வீட்டில் அமர்ந்து ஜோடியாக மது அருந்திக் கொண்டிருந்து உள்ளார்கள். 

அப்போது, அதனை மறைந்து இருந்து பார்த்த அந்த இளைஞன், நீண்ட நேரமாக சமயம் பார்த்துக் காத்திருந்து உள்ளான்.

அதன் பிறகு, அந்த முதலாளி மது போதை அதிகமான நிலையில், அங்கிருந்து வெளியே சென்று விட்டார். அப்போது, அந்த முதலியின் மனைவி மட்டும் மது போதையில் தள்ளாடிய படி அங்கே தனியாக இருந்திருக்கிறார். 

அப்போது, இதனைக் கவனித்துக்கொண்டிருந்த அந்த வேலைக்காரன் ரஞ்சன், பாய்ந்து சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப் போராடி உள்ளார். போதையில் இருந்தாலும், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இந்த இளைஞனுடன் கடுமையாகப் போராடி உள்ளார். ஒரு கட்டத்தில், இந்த பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து அந்த இளைஞனை அந்த பெண் தடுத்து நிறுத்தி உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னுடைய கணவரிடம்  இதை தெரிவிப்பதாகக் கூறி, அந்த இளைஞனை மிரட்டி உள்ளார். 

இதனால், பயந்துபோன வேலைக்கார இளைஞன் ரஞ்சன், “தன்னை இந்த பெண் எப்படியும் காட்டிக்கொடுத்து விடுவார்” என்று பயந்து, அந்த பெண்ணை  அங்கேயே அடித்து, கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

அப்போது, அங்கு வந்த அந்த முதலாளி, தனது மனைவி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். அங்கு, அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி உள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்த தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான், வேலைக்கார இளைஞன் ரஞ்சன் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.