மனைவியை டைவர்ஸ் பண்றேன்னு சொல்லிச் சொல்லியே இளம் பெண்ணை தொழிலதிபர் ஒருவர் பல முறை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பை நகரில் சுனித் வாக்மரே என்ற தொழிலதிபர், அப்பகுதியில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், மனைவி மற்றும் தனது குழந்தைகளோடு வசித்து வருகிறார்.

இந்த நிலையில், திருமணம் ஆன இரு குழந்தைகள் இருக்கும் இருக்கும் 30 வயதான இளம் பெண் ஒருவர், வேலை கேட்டு தொழிலதிபர் சுனித் வாக்மரேவை அனுகி உள்ளார். 

அப்போது, அந்த பெண்ணின் அழகில் மயங்கிய தொழிலதிபர் சுனித் வாக்மரே, அந்த பெண்ணுக்கு தன்னுடைய ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை போட்டுக் கொடுத்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் அலுவலகத்திலேயே அன்றாடம் பேசி சிரித்துப் பழகி வந்து உள்ளனர்.

இதனால், தொழிலதிபர் - பணியாளர் என்ற அளவில் இருந்த பழக்கம் சற்று மாறி முதலில் நட்பாகவும், பிறகு அது இன்னும் நெருக்கமாகி காதலாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது. 

இருவருக்குள்ளும் நட்பு, காதலாக மாறியதால், அதன் பிறகு தொழிலதிபர் சுனித் வாக்மரே, அந்த பெண்ணிடம் “நான் என்னுடைய மனைவியை விவகாரத்து செய்து விட்டு, உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன்” என்று, வாக்குறுதி அளித்து உள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண், அதன் பிறகு சுனித் வாக்மரே உடன் மிகவும் நெருக்கமாகப் பழகத் தொடங்கி உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “மனைவியை டைவர்ஸ் பண்ணும் விஷயமாக வழக்கறிஞரைப் பார்க்கப் போகிறேன்” என்று, அந்த பெண்ணிடம் கூறி விட்டு. அந்த 
பெண்ணையும் அவர் தன்னுடன் துணைக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

இதனை நம்பி அவரோடு சென்ற அந்த பெண்ணை, அங்குள்ள ரிசர்ட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்துப் பல முறை மாறி மாறி அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அந்த பெண்ணும், “நம்மை தான் இவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறாரே” என்று, அவரது ஆசைக்கு உடன்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த பெண்ணை அவரின் வீட்டில் விட்டு விட்டுச் சென்ற அந்த தொழில் அதிபர், அதன் பிறகு அந்த பெண்ணை அவர் தொடர்புகொள்ளவே இல்லை. இப்படியாக சில நாட்கள் ஆன நிலையில், தொழில் அதிபர் சுனித் வாக்மரேவை தொடர்பு கொண்டு அந்த பெண் பேசிய உள்ளார்.

அப்போது பேசிய அவர், “என்னுடைய மனைவி விவகாரத்துக்குச் சம்மதிக்கவில்லை. இதனால், நாம் நமது உறவை இப்படியே துண்டித்துக் கொள்ளலாம்” என்று, பேசி இருக்கிறார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொழிலதிபர் சுனித் வாக்மரேவை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.