திரையுலகை சேர்ந்தவர்கள் மாலத்தீவுகளுக்கு படையெடுத்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. லாக்டவுன் முடிந்து கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே மாலத்தீவு சென்று வருகின்றனர். காஜல் அகர்வால் தன் கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் தேனிலவுக்காக மாலத்தீவுகளுக்கு சென்றார். 

அதன் பிறகு சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட்டை சேர்ந்த சோனாக்ஷி சின்ஹா, கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, அனன்யா பாண்டே, இஷான் கட்டார், ஃபர்ஹான் அக்தர், ஷிபானி தந்தேகர், டைகர் ஷ்ராஃப், திஷா பதானி உள்ளிட்டோர் மாலத்தீவுகளுக்கு சென்றனர்.

அந்த வரிசையில் சாரா அலி கான் மாலத்தீவு சென்று புகைப்படம் வெளியிட்டுள்ளார். பிகினி அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் சாரா. ஒரு புகைப்படத்தில் அவர் அமர்ந்திருக்க, மற்றொன்றில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார். இதுதான் வைட்டமின் சி என்று கேப்ஷன் தந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

2018ஆம் ஆண்டு, கேதர்நாத் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாரா அலி கான். இவர் நடிகர் சைஃப் அலி கான் - அம்ரிதா சிங் தம்பதியின் மகள். ஷர்மிளா தாகூர், மன்சூ அலிகான் பட்டோடியின் பேத்தி. தொடர்ந்து சிம்பா, லவ் ஆஜ்கல் 2, சமீபத்தில் கூலி நம்பர் 1 என சாரா அலி கான் நடித்துளார்.

சாரா கைவசம் அத்ரங்கி ரே திரைப்படம் உள்ளது. இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. பாலிவுட் சென்சேஷனான சாரா அலி கானை வைத்தே அத்ரங்கி ரே கதை நகரும் என கூறப்படுகிறது. படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)