இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கிய படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் .மேலும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை இந்த படத்தை தயாரித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். பழனி மற்றும் ஊட்டி போன்ற சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

ஏற்கனவே படப்பிடிப்பை முடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இலங்கை தமிழராக நடித்துள்ளார் சேது. காவல் அதிகாரியாக மகிழ் திருமேனி நடித்துள்ளார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சேது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

விஜய் சேதுபதி கைவசம் துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், கடைசி விவசாயி போன்ற படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.