இந்தியாவின்  மிகப்பெரிய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவன தலைவருமான  முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன்  மும்பை ஆன்டாலியாவில் வசித்து வருகிறார்.  இந்த வீடு 4 லட்சம் சது அடி பரப்பளவு கொண்டது. 27 தளங்களுடன், 173 மீட்டர் உயரம் கொண்ட இந்த வீடு, நில நடுக்கத்தையும் தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் சமீபத்தில் முகேஷ் அம்பானி  லண்டனின் ஸ்டோக் பார்க் பகுதியில்  300 ஏக்கர் பரப்பு நிலத்தை  592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்தக் கட்டிடத்தில் 49 பிரம்மாண்ட பெட்ரூம் உடன் பல வசதிகள் உள்ளது. இந்த வீட்டிற்குத் தான் தற்போது முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால்  இதுகுறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ரிலையன்ஸ் மற்றும் முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. அம்பானி குடும்பம் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் வசிக்கப்போவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து சமூக ஊடகங்களில் அது தொடர்பான ஊகங்கள் சுற்றி வந்தன. 

லண்டனில் முகேஷ் அம்பானி வாங்கிய ஸ்டாக் பார்க் மாளிகை.. ஷங்கர் பட செட் போல்  பிரம்மாண்ட புகைப்படம் - Cinemapettai

இந்தநிலையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை மறுத்துள்ளனர். இந்த செய்தி "அடிப்படையற்றது".  ரிலையன்ஸ் நிறுவன தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை. 

லண்டன் ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், நிறுவனம் கையகப்படுத்திய நோக்கம், கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதுதான், என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வணிகத்தை கருத்தில் கொண்டு, இந்த சொத்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. 

லண்டனில் 300 ஏக்கரில் வீடு வாங்கி குடிபெயர்கிறாரா அம்பானி! | Bhoomitoday

இந்தியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பல் துறையை, உலகளவில் விரிவுப்படுத்தும் திட்டம்தான் எங்களிடம் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணங்கள் அதேநேரம், அம்பானி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 

592 கோடி ரூபாய்க்கு லண்டன் சொத்தை ரிலையன்ஸ் வாங்கிய பிறகு, அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதால், இதுபோன்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி ருகின்றன.