தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் எழுதலாம் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மொழிப்பட்டியலில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அஞ்சல் தேர்வகளைத்‌ தமிழில்‌ நடத்த வேண்டும்‌ என மத்திய அரசை விடுதலைச்‌ சிறுத்தைகள்‌ கட்சி வலியுறுத்தி அறிக்கையை வெளிவிட்டு உள்ளனர்.

’’ அஞ்சல்‌ துறைக்கு கணக்கர்‌ பதவிகளுக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பில்‌ இந்தி மற்றும்‌ ஆங்கிலம்‌ ஆகிய மொழிகளில்‌ மட்டுமே இந்த தேர்வு நடைபெறும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கர்‌ பதவிகளுக்கான தேர்வை தமிழ்‌ உள்ளிட்ட மாநில மொழிகளில்‌ நடத்த வேண்டும்‌. அதற்கான அறிவிப்பை வெளியிடும்‌ வரை இந்தத்‌ தேர்வை நடத்த கூடாது என விடுதலைச்‌ சிறுத்தைகள்‌ கட்சியின்‌ சார்பில்‌ மத்திய அரசை வலியுறுத்துகிறோம்‌.

மத்திய அரசு கடந்த ஆண்டூ அஞ்சல்‌ துறையில்‌ “போஸ்ட்மேன்‌” பதவிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பிலும்‌ இதுபோலவே ஆங்கிலத்திலும்‌ இந்தியிலும்‌ மட்டுமே தேர்வு என அறிவித்தது. விடுதலைச்‌ சிறுத்தைகள்‌ கட்சி உள்ளிட்ட அரசியல்‌ கட்சிகள்‌ அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதையும்‌ மீறி அந்த தேர்வு நடத்தப்பட்டது. அதை எதிர்த்து சசன்னை உயர்நீதிமன்றத்தில்‌ எபாதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்‌ தேர்வு முடிவுகளை எவளியிடக்‌ கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது.