பெற்ற மகனை, தாயே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடக்காவூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதில், அவர்களுக்கு இரு பிள்ளைகள் ஆவர். 

திருமணத்திற்குப் பிறகு, இந்த தம்பதியரின் வாழ்க்கை சந்தோசமாக சென்றுகொண்டிருந்த நிலையில், கணவர் வெளிநாட்டில் வேலைக்காகச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து வேறுபாட்டால், கணவன் - மனைவி இருவரும் கடந்த பல ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால், இந்த தம்பதியரின் குழந்தைகள் இருவரும் தாயுடன் தங்கி இருந்தனர்.

இதனையடுத்து, வெளிநாடு சென்றிருந்த கணவன் மீண்டும் சொந்த ஊர் திரும்பி உள்ளார். அப்போது, தனது குழந்தைகளை தன்னுடனே இருக்கும் படி, அவர் விரும்பி உள்ளார். 

அதன் படி, வெளிநாட்டில் இருந்து வந்த தந்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்று உள்ளார். ஆனால், அடுத்த சில நாட்களில் தனது மகனான சிறுவனின் நடத்தையில் சில மாற்றங்கள் இருப்பதை அவர் கவனித்து உள்ளார்.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த தந்தை, மகனின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கேரளாவில் உள்ள குழந்தைகள் நல ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்டுள்ளார். 

அப்போது, அந்த தந்தையை வெளியே காத்திருக்கும் படி கூறிவிட்டு, அந்த சிறுவனை அழைத்து மருத்துவர் பேச்சு கொடுத்து உள்ளார். மருத்துவரின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய அந்த சிறுவன், “எனக்கு கடந்த 4 ஆண்டுகளாக எனது தாய் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அப்போது, அந்த சிறுவன் கூறி உள்ளான். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மருத்துவர், அந்த சிறுவனுக்கு பல ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

இதனையடுத்து, அந்த சிறுவனின் தந்தையிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுவன் தந்தை, உடனடியாக இது குறித்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், “எனது தாய், எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக” பாதிக்கப்பட்ட சிறுவன் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இதனைப் பதிவு செய்துகொண்ட போலீசார், இந்த பாலியல் தொல்லையை உறுதிப்படுத்திக்கொண்டனர். 

இதனையடுத்து, அந்த சிறுவனின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பெற்ற மகனை, தாயே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.