ஆன்லைன் சூதாட்டம் மூலம் பல மோசடி மற்றும் தற்கொலை புகார்கள் தொடர்ந்து எழுந்த நிலையில் , தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க கோரி பல்வேறு தரப்பிலும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர மசோதா கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. 


இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 21-ந்தேதி , சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. 
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். இதனால் இன்று முதல் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 


தடையை மீறி ரம்மி விளையாடினால் 5000 ரூபாய் அபதாரம் , 6 மாதம் சிறை தண்டனை. ரம்மி விளையாட்டு அரங்கம் விளையாட்டினால் 10,000 ரூபாய் அபதாரம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்று இந்த அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.