கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிந்தார்கள். சிம்பு - கெளதம் மேனன் இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையில் மூன்றாம் முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது

தற்போது சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜனவரி 28 இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது சிம்பு நடிப்பில் உருவாகும் 47-வது படமாக உருவாகவுள்ளது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 கதையைத் தயார் செய்து வைத்திருந்தார் கெளதம் மேனன். அதிலிருந்து ஒரு காட்சியை மட்டும் எடுத்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற பெயரில் குறும்படமாக எடுத்து வெளியிட்டார். அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கௌதம் மேனன் தனது ட்விட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளார்.  மீண்டும் சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் கௌதம் மேனன் இணைந்து உள்ளதை அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா 2 இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாநாடு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று உள்ளது இந்த போஸ்டர். இந்த படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைக்கிறார்.