புற்றுநோய் என்பது நம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.உலகில் 6 நொடிக்கு ஒரு முறை ஒருவர் இறப்பதற்கு காரணமாக இருப்பது புற்றுநோய் தான் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அதனால் தான்  புற்றுநோயை தடுத்தல், அதைக் கண்டறிதல் மற்றும் அதன் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 அன்று உலகளவில்  புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

cancer day


உலக புற்றுநோய் தினமானது 2000 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.பின்பு 2007 -இல் நிகரகுவாவில், உலக புற்றுநோய் தினம் நாட்டிற்குள் புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கு சிறந்த அணுகலையை உருவாக்க ஒரு சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்தது.2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலக புற்றுநோய் பிரகடனத்தின் இலக்குகளை பிரச்சாரம் செய்வதற்கும் வாதிடுவதற்கும் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியத்தால் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. 2010-11 ஆம் ஆண்டுகளில் Cancer can be prevented என்ற தீம் உருவாக்கப்பட்டது. அதன்பின்பு 2012-இல் Together let's do something, 2013-இல் Cancer Myths - Get the Facts, 2014-இல் Debunk the Myths,2015 ஆம் ஆண்டு    ‘'Not beyond us', 2016 - 2018 ஆம் ஆண்டுகளில் We can - I can,2019 -2021 ஆம் ஆண்டுகளில் I Am and I Will போன்ற தீம்கள் உருவாக்கப்பட்டது. .இதை ஆதரிக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள 37 நகரங்கள் ஆரஞ்சு மற்றும் நீல விளக்குகளால் முக்கியமான இடங்களை அலங்கரித்தன.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஏற்படும் மரணங்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று புற்றுநோயாகும்.சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (யு.ஐ.சி.சி) 1993 இல் நிறுவப்பட்டது.ஜெனீவாவை தளமாகக் கொண்டு, இது உலகெங்கிலும் உள்ள புற்றுநோயை ஒழிப்பதற்கும்,மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகிறது.2008 ஆம் ஆண்டில் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியத்தால் தொடங்கப்பட்ட உலக புற்றுநோய் தின நடவடிக்கைகள் 2020 க்குள் புற்றுநோயால் ஏற்படும் நோய் மற்றும் இறப்பை கணிசமாகக் குறைக்க முயல்வதற்கு உதவியுள்ளது.அதன் வழிகாட்டுதலின் கீழ், முதல் சர்வதேச புற்றுநோய் தினம் அதே ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கொண்டாடப்பட்டது.பல பிரபலமான நிறுவனங்கள், புற்றுநோய் சங்கங்கள் மற்றும் சிகிச்சை மையங்களும் இந்த முயற்சியை ஆதரித்தன.


புற்றுநோயில் ஏராளமான வகைகள் உள்ளன. குறிப்பிட்ட வகை புற்றுநோயைக் குறிக்க மற்றும் அதற்கு எதிரான போராட்டத்தை ஊக்குவிக்க பல்வேறு வண்ணங்களும் சின்னங்களும் பயன்படுத்தப்படுகின்றன.எடுத்துக்காட்டாக, Orange Ribbon என்பது குழந்தைகளுக்கு  புற்றுநோய்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும், அதே போல்  Pink Ribbon மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுடன் உலகளவில் தொடர்புடையது. நோயாளிகளுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நம்பிக்கையின் அடையாளமாக, இந்த உயிருக்கு ஆபத்தான நோய் இனி இல்லாத எதிர்காலத்தில் அமெரிக்க புற்றுநோய் சங்கத்தால் Daffodil Flower பயன்படுத்தப்படுகிறது.

 

 


இந்த நாளில், மருத்துவமனைகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், சந்தைகள், சமூக அரங்குகள், பூங்காக்கள் போன்றவற்றில் தனிநபர்களை சமூக அமைப்புகளாக  ஒன்றிணைந்து செயல்பட்டு , ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் மற்றும் நிதிகளை திரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு போதும் தனியாக இல்லை என்றும், இந்த நோயின் தாக்கத்தை உலகளவில் குறைப்பதற்கும், மக்களின் பிரச்சாரம் மிகவும் முக்கியம் எனபதை நினைவூட்டுகிறோம்.

 

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9.6 மில்லியன் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்.அதை  நிச்சயமாக நம்மால் தடுக்க முடியும்.பொதுவான புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பங்கு தடுக்கக்கூடியது மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியதாகவே உள்ளது.உலகெங்கிலும்  ஏற்படும் இறப்பிற்கான இரண்டாவது பொதுவான காரணம் புற்றுநோய்.இந்த இழப்பிற்கு வருமானம் ஒரு முக்கிய காரணியாகவும் விளங்குகிறது.புற்றுநோயால் ஏற்படும்  70% இறப்புகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.புற்றுநோயின் மொத்த பொருளாதார செலவு ஆண்டுக்கு  1.16 டிரில்லியன் ஆகும்.

International Agency For Research on Cancer  அளித்த  தகவலின் படி 2020 இல் மட்டும் ஒரு கோடி பேர்  புற்றுநோயால் இறந்துள்ளனர்.புதிய புற்றுநோயால் 19.3 மில்லியன் பேர் மரணமடைந்துள்ளனர்.புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சு,கீமோ, ஸ்டெல்செல் போன்ற உயரிய சிகிச்சையின் மூலம் இதை குணப்படுத்தலாம் என்கிறது மருத்துவர்கள் குழு.இதுமட்டுமின்றி தடுப்பூசி போடுவதன் மூலம் ஆண்டிற்கு 10 லட்சம் பேரை காப்பாற்றலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. 

விழிப்புணர்வோடு  இருப்போம், புற்றோநோயிலிருந்து விழித்துக் கொள்வோம்.