தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி , தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஒமலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில், பல கேள்விகளுக்கு அளித்துள்ளார். 

கேள்வி: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டு வருகிதே?
பதில்: நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசாங்கத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

 

கேள்வி: இடஒதுக்கீடு கொடுக்க வாய்ப்பு உண்டா?
பதில்: எந்த சூழ்நிலையில் எதை செய்ய வேண்டுமோ அந்த அந்த சூழ்நிலையில் அரசாங்கம் செயல்படும். நான் சென்ற இடம் எல்லாம் சிறப்பாக எழுச்சியாக மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது. அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும். உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும். அ.ம.மு.க கட்சி என்று சொல்ல முடியுமா? அ.தி.மு.க வேறு அ.ம.மு.க வேறு. அ.ம.மு.க மூக்கை நுழைத்து பார்க்கிறது, நிச்சயம் ஒன்றும் நடக்காது.  அ.ம.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் சேர விருப்பபட்டால் தலைமை முடிவு செய்யும்.

 

கேள்வி: தி.மு.க பொது எதிரி, சேர்ந்துதான் முறியடிக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளாரே?
பதில்: இது அவர்களுடைய கருத்து, இதுக்கு நாங்கள் எப்படி கருத்து சொல்ல முடியும். அ.தி.மு.கவை பொறுத்த வரை எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க ஒரு தீய சக்தி என்று கூறினார், அவர்களை எதிரி கட்சியாக பார்க்கிறோம். அவர்களை எதிர்த்தே போட்டியிட்டு தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருகிறோம். 

 

கேள்வி: சசிகலா குறித்து பேசுவதில்லை என்று கூறுகிறார்களே?
பதில்: கட்சியில் இல்லாதவர்கள் குறித்து ஏன் பேச வேண்டும். டி.டி.வி தினகரன் எங்கள் கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை பிரித்து கொண்டு சென்று ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் பிரிக்க வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால் கட்சியை உடைக்க முடியவில்லை அ.ம.மு.க என்று ஒரு கட்சியை தொடங்கினார். அதனால் அவரை பற்றி பேசுகிறோம். உச்ச நீதி மன்றம் ஊழல் குற்றசாட்டு உள்ளவர்களை விசாரிக்க தனி நீதி மன்றம் அமைத்துள்ளது. இது தெரியாமல் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார்.  தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் 23பேர் மீது ஊழல் புகார் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

 

கேள்வி: துரைமுருகன் சொல்கிறார் முதல்வர் மட்டுமே வெளியே வருகிறார் துணை முதல்வர் வெளியில் வருவதில்லை என்று?
பதில்: அவருடைய கட்சியை பற்றி கவலைபட வேண்டும். அழகிரி பற்றி அவர் பேசட்டும். திட்டமிட்டு விஷமத்தனமான பிரச்சாரத்தை தி.மு.கவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு எள் மணி அளவு கூட எங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்த முடியாது. 13 ஆண்டு காலம் தி.மு.க மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள், என்ன திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள்.அ.தி.மு.க  ஆட்சியில் ஒரே வருடத்தில் 11 மருத்து கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் உதவி பெற்று தர்மிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். 

 

கேள்வி: வேலூரில் துப்பாக்கியுடன் நபர் பிடிபட்டுள்ளார். தற்போது சென்னை மற்றும் சேலத்திற்கு மிரட்டல் வந்துள்ளது? யாருடைய அச்சுறுதல் உள்ளதா என்று நினைக்கிறீகளா? 
பதில்: அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன்.