கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை இடைதேர்தல் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் 6 சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் செய்தார். 


அப்போது பேசிய அவர்,‘’கன்னியாகுமரியில் சரக்குப்பெட்டக துறைமுகம் வருவதாக அவதூறு செய்தியை தேர்தல் லாபத்துக்காக பரப்புகின்றனர்.அது பொய் சரக்குப் பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் திமுக, காங்கிரஸ் சேர்ந்து மீனவர்களின் ஓட்டுக்காக இதை பரப்பி வருகிறார்கள். துறைமுகம் அமைக்கும் திட்டம் சிறப்பு அதிகாரிகள் மூலம் ரத்துச் செய்யப்பட்டுவிட்டது.


விவசாயம், மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மீனவர்களுக்காக  தனி வங்கி ஏற்படுத்தப்படும். மீனவர்கள் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு நிவாரணமாக 2 லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக வழங்கப்படும். உள்நாட்டு மீனவர்களுக்காக விரிவான திட்டம் கொண்டுவரப்படும். 


மீனவர்களுக்கு காங்கிரீட் வீடுகள், மானியத்தோடு, வரி விலக்கோடு வழங்கும் 18,000 லிட்டர் டீசல் 20 ஆயிரமாக வழங்குகிறோம். மண்ணெண்ணெய், மீன்பிடி தடைக்காலம் 5 ஆயிரம் கொடுப்பதை 7,500 ஆக வழங்கப்படும். மீனவர்கள் பல்வேறு பிரச்னையால் கடன் பெறுகிறார்கள்.


திமுக ஆட்சி இருண்ட ஆட்சி கடுமையான மின் வெட்டு. இன்று தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். மத்திய பாஜக அரசு உதவிகள் செய்கின்றது. இன்று வெற்றி நடைப்போடும் தமிழகம் என்ற நிலையை அடைந்துள்ளது” என்றார்.