மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.மலையாளம் சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஜொலித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தொடர் வெற்றிகளால் அவதரித்தார் துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான Varane Avashyamund மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் சில முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடித்து அசத்தியுள்ளார் துல்கர்.

அடுத்ததாக இவர் நடித்துள்ள குரூப்,ஹே சினாமிகா உள்ளிட்ட சில படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன.இதில் குரூப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ஸ்னிக் பீக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த டீஸர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்