தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘’ ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசியே இல்லை. தமிழகத்துக்கு முதல்வராகக் கொடுப்பினை வேண்டும். நான் முதல்வராக இருப்பது ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது.


கொரோனா போன்ற இக்கட்டான சூழலில் கூட தமிழகத்தைச் சிறப்பான நிர்வாகத் திறனிலிருந்தது. திமுகவை வீழ்த்த நான் உயிரைக் கொடுக்க கூட தயார். திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி. திமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது கிடையாது. அதனால் தான் சாதனையைச் சொல்லி தேர்தல் பிரசாரம் செய்வது இல்லை.

ஸ்டாலின் எந்நேரமும் என்னை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். திமுக அவர்களது குடும்பத்துக்கான கட்சி. அதிமுக மக்களுக்கான கட்சி.” என்று பேசியுள்ளார்.