நாடெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி நாடு சென்று கொண்டு இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ‘’இந்தியாவில் இந்த ஆண்டின் அதிக அளவாக ஒரே நாளில் 62 ஆயிரத்து 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 910 ஆக அதிகரிதுள்ளது. 


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 12 லட்சத்து 95 ஆயிரத்து 23 பேர் குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 52 ஆயிரத்து 647 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 240 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.