தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் நடிகை ஷகிலா இணைந்துள்ளார். அவருக்கு மாநில பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.


30 வருடங்களுக்கு மேலாக  மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் தற்போது சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்று, மேலும் நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.


இந்நிலையில்  தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் அனைத்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.