அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7ஆயிரத்து 967 விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டன. விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டவர்களுக்கு இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.


இந்த நேர்காணலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவைத்தலைவர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நடத்துகின்றனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதல்கட்டமாகவும், பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை இரண்டாம் கட்டமாகவும் நேர்காணல் நடைப்பெற்றது. விருப்பமனு அளித்தவர்கள் அனைவருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.


இந்நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். அதனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம் ” என்றார்.