கடந்த நான்கு மாதங்களாக, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி  விவசாயிகளின்  போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து விவசாய சங்கங்கள் இன்று நாடு தழுவிய அளவில் பந்த் நடத்திக்கொண்டு உள்ளன. டெல்லியில் சிங்கு, காஜிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய 3 எல்லைகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.


நாடு முழுவதும் இன்று 12 நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அங்கு பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 


நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றாலும் கூட  5 மாநிலங்களில் போராட்டம் நடைபெறவில்லை. தமிழகம், அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால். இதற்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், இந்த 5 மாநிலங்களில் மட்டும் பந்த் நடைபெறவில்லை. 


மத்திய அரசு விவசாய சட்டங்களில் திருத்தங்கள் மட்டும் தான் செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. ஆனால் விவசாயிகளும் சட்டங்களை திரும்ப பெறும் வரை விவசாயிகள் யாரும் டெல்லியை காலி செய்யப் போவதில்லை என்று உறுதியாகப் போராடி வருகிறார்கள்.