காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதால், காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குற்றங்களுக்குப் பெயர் போன உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான், இப்படி ஒரு குற்றச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த கன்ச்கஞ்சைச் சேர்ந்த தேவேந்திராவும், அங்குள்ள பக்கத்து ஊரைச் சேர்ந்த இளம் பெண் சோனமும் 
ஒருவரை ஒருவர் காதலித்து வந்து உள்ளனர். இப்படியாக, இவர்கள் இருவரும் பல வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், அந்த பகுதியின் பல்வேறு இடங்களுக்கு இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், அந்த காதலனின் வீட்டில், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்த தகவல், அந்த இளைஞரின் காதலிக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உள்ளார். இதனால், தனது காதலனை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்து உள்ளார்.

திட்டமிட்டபடி, அந்த காதலி எப்போதும் தன் காதலனிடம் பேசுவது போல் பேச்சுக்கொடுத்து, “வீட்டில் மின் விசிறியைச் சரி செய்ய வேண்டும். உடனே வா” என்று, தனது காதலனை அந்த பெண் அழைத்திருக்கிறார்.

அப்போது, இதனை உண்மை என்று நம்பிய அந்த காதலனும், அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து, காதலன் மீது கண் இமைக்கும் நேரத்தில் அந்த இளம் பெண் வீசு உள்ளார். இதில், ஆசிட் பட்ட வேகத்தில் அந்த இளைஞரின் முகம் வெந்து போய்  வலியால் சத்தம் போட்டு உயிர் போகும் அளவுக்கு கத்தி உள்ளார்.

இளைஞனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இப்படி மிகவும் ஆபத்தான நிலையில் அந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிரிழந்து உள்ளார். 

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், “அங்குள்ள கன்ச்கஞ்சைச் சேர்ந்த தேவேந்திராவும், குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் சோனமும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வந்தது” தெரிய வந்தது.

இப்படி ஒரு அலுவலகத்தில் பணியாற்றிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததும், தெரிய வந்தது. இதனையடுத்து, ஹரிபர்பத் காவல் துறையினர் இளம் பெண் சோனமை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.