கஸ்டமரை வீட்டிற்கே கூட்டி வந்த கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி, விபச்சாரத்தில் ஈடுபட மறுத்ததால் அந்த பெண் உச்சக்கட்ட கொடூரத்தில் சிக்கித் தவித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒடிசா மாநிலம் சந்திரசேகர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பத்மாவதி விஹாரில் வசித்து வந்த சந்தன் ஆச்சார்யா என்பவர், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 5 வயதில் ஒரு மகளுடன் உள்ளனர். இவர்கள் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், திருமணத்திற்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாகவே அவர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது மகிழ்ச்சி வெறும் 3 ஆண்டும் மட்டுமே நீடித்து உள்ளது. 

திருமணமாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்டோ டிரைவரான சந்தன் ஆச்சார்யா, தன்னுடைய மனைவியை அந்த பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி மிக கடுமையாகக் கொடுமைப் படுத்தி வந்திருக்கிறார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தனது மனைவியை அவர் அடித்து மிகவும் துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால், வேறு வழியில்லாமல் அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளாக இந்த விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்படியே, சில ஆண்டுகள் சென்ற நிலையில், அந்த பெண் இந்த விபச்சார தொழிலை முற்றிலுமாக வெறுத்து உள்ளார். 

இதன் காரணமாக, இப்போது இந்த தொழிலில் துளியும் விருப்பமில்லாததால் அந்த பெண் இருந்து வந்த நிலையில், அந்த பெண்ணின் கணவன் மீண்டும் தனது மனைவியை இந்த விபச்சார தொழிலில் தள்ளப் பார்த்து உள்ளனர். ஆனாலும், அவரது மனைவி பிடிவாதமாக இதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால், அந்த கணவர் தனது மனைவியை மீண்டும் அடித்துக் கொடுமைப்படுத்தத் தொடங்கி உள்ளார்.

இப்படியாக, கடந்த 5 நாட்களுக்கு முன்பு, கஸ்டமரை வீட்டிற்கே கூட்டி வந்த கணவன், தன் மனைவியிடம் சண்டைக்குச் சென்று உள்ளார். இதற்கு மறுத்த அந்த தன் மனைவியை இரும்புக் கம்பியால், அவர் தாக்கி இருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, தனது மனைவி என்றும் பார்க்காமல் அந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மற்றும் பிறப்பு உறுப்புகளில் துளியும் இரக்கம் இல்லாமல்  மது பாட்டிலால் தாக்கி அவற்றால் குத்தி உள்ளார்.

இதனால், அந்த பெண் அப்படியே மங்கி விழுந்து உள்ளார். தாக்குதல் நடத்திய அவரது கணவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அந்த பெண், சொல்போன் மூலமாக தனக்கு நேர்ந்து கொடுமைகளைத் தனது தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டுப் பதறிப்போன அந்த பெண்ணின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து அங்குள்ள சந்திரசேகர்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அத்துடன், சம்மந்தப்பட்ட வீட்டிற்குச் சென்ற போலீசார், வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணையும், அவரின் 5 வயது மகளையும் அந்த வீட்டில் இருந்து மீட்டனர். பிறகு, அந்த பெண்ணை அவசர அவசரமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து, தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண்ணின் கணவரான ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.