டுவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ள பராக் அகர்வால் புதிய சிஇஓ ஆகப் பொறுப்பேற்கிறார்.

Barak Agarwal

டுவிட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஜாக் டோர்சி. அவர் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆகவும், டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சி  இருந்து வந்தநிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கேயே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி பின் அங்கேயே குடியுரிமை பெற்று குடியேறினார். பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹூ நிறுவனங்களில் சிறிய அளவிலான எஞ்சினியர் தொடங்கி பெரிய அளவிலான டீம் லீடர் பொறுப்புகளை கூட வகித்து இருக்கிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பத் தலைவர் ஆக இருந்த ஆடம் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து மார்ச் 8, 2018ல் பராக் அக்ரவால் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்றார். இப்போது 2021 நவம்பரில் பராக் அகர்வால், டுவிட்டரின் சிஇஓவாக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச நிறுவனங்கள், முக்கியமாக அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓ உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா நாடெல்லா, கூகுள் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை, ஐபிஎம் உள்ளிட்ட மற்ற பெரிய நிறுவனங்களின் சிஇஓவாகவும் இந்தியர்களே உள்ளனர். 

டுவிட்டரில் ஆயிரத்திற்கும் குறைவான பணியாளர்கள் இருந்த போது பணியில் சேர்ந்த பராக் கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.  கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக பொறுப்பு வகிக்கும் இந்தியர்களான சுந்தர் பிச்சை மற்றும் சத்யா நாதெள்ளா ஆகியோரை தொடர்ந்து பராக் அகர்வாலும் முக்கிய நிறுவனமான டுவிட்டரின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். உலகின் டாப் 500 நிறுவனங்களின் சிஇஓக்களில் பராக் அகர்வாலும், மார்க் ஜூக்கர்பர்கும் மிகவும் இளமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.