உக்ரைன்-ரஷ்யா போரை முன்னிட்டு ஐரோப்பிய யூனியன், நேட்டோ படையில் இணைக்க உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்.

ukraine war

உக்ரைன் நாட்டினை கைப்பற்ற ரஷியா போர்தொடுத்து சென்று, 5 ஆவது நாள் தாக்குதல் நடைபெற்று வருகிறது. உக்ரைனை நேட்டோ படையில் இணைக்க ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் அரசு நேட்டோ படையில் இணைய முனைப்புடன் செயலாற்றி, அதற்கான நடவடிக்கை எடுத்து வந்தது. 
ரஷியா வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து நேரடி தாக்குதலில் ஈடுபட்டால் உலக வரலாற்றில் இல்லாத அழிவை தருவோம் என எச்சரித்திருந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் படைகள் ஐரோப்பியா - உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், உக்ரைன் நாடு நேட்டோ படையில் இணைய உக்ரைன் பாராளுமன்றம் சம்மதம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அந்த தீர்மானத்தை அனுமதி செய்து உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டு இருக்கிறார். இதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கீழ் உக்ரைன் தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கிறது. இதனால் ரஷியா அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக இந்த தகவல் வெளியாகுவதற்கு 20 நிமிடம் முன்னதாக ரஷிய பிரதிநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "நேட்டோவில் இணைவதற்கான செயல் திட்டங்களை உக்ரைன் & ஜார்ஜியா செய்து வருகின்றது. அமெரிக்காவின் கொள்கையானது ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனை உருவாக்குவது ஆகும். அதனை நேட்டோ படைகளில் இணைக்கவும் முயற்சிக்கிறது. உக்ரைன் நேட்டோவில் இணைவது ஒரு சிவப்புக் கோடு. பதிலுக்கு நடவடிக்கை எடுக்க ரஷியாவை கட்டாயப்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.