தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழும் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது 2022-ல் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படம் வரை தனது இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டு வருகிறார்.

இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா தனக்கென தனி பாணியில் இந்த 25 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மகிழ்வித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துவரும் நானே வருவேன் படத்திற்கு இசை அமைத்து வரும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் மேலும் வரிசையாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் புதிய படம், சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன், கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம், இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகும் இறைவன் மிகப் பெரியவன், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் ஆகிய திரைப்படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான்.

இந்நிலையில் தனது இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை கடந்துள்ள யுவன் ஷங்கர் ராஜா நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனது ரசிகர்களின் அன்பே எனது வலிமை” என குறிப்பிட்டுள்ள யுவன் ஷங்கர் ராஜா கோடானகோடி ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இசை கலைஞர்கள் என பலருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் உருக்கமான அந்த பதிவு இதோ…