சிறந்த இசையமைப்பாளராக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிகராகவும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த இடிமுழக்கம் திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் தற்போது ஜீவி நடித்து வருகிறார்.

மேலும் இசையமைப்பாளராக தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் மற்றும் தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் வாத்தி, கார்த்தியின் சர்தார், ராகவா லாரன்ஸின் ருத்ரன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனிடையே  அடுத்ததாக ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் செல்ஃபி.

இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் உதவி இயக்குனரான இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் செல்ஃபி திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப், குணநிதி மற்றும் DG ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

DG பிலிம் கம்பனி தயாரிப்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வழங்கும் செல்ஃபி படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் செல்ஃபி திரைப்படம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.