உக்ரைன் போரில் ரஷ்யா அதிபர் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் தெர்மோபரிக் குண்டுகளை வீச திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

உலகில் சுமார் 13,080 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷியா மற்றும் அமெரிககா ஆகிய நாடுகள் தங்களுக்குள் இருந்த பனிப்போரால் அதிக அளவு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வைத்துள்ளன. 30-40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் தற்போது அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பே, அணு ஆயுத போர் பயிற்சியை அதிபர் புதின் தலைமையில் செய்து பார்த்தது ரஷியா. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்தன. அணு ஆயுதம் தாண்டி, போர் கருவிகள், போர் விமானங்கள், படைகள், வீரர்கள் என எல்லாவற்றிலும் ரஷியாவின் கையே ஓங்கியுள்ளது. 

இந்நிலையில் கடைசியாக 1945-ல் நடந்த 2-ம் உலக போரில் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா ஆகஸ்ட் 6ல் ஜப்பான் ஹீரோசிமாவிலும், ஆகஸ்ட் 9ல் நாகசாகியிலும் அணுஆயுதங்களை வீசியது. இதில் அமெரிக்கா கணக்குப்படி ஒரு லட்சத்து 35 ஆயிரம் மக்கள் வசித்த ஹீரோசிமாவில் பாதிபேர் 67 ஆயிரத்து 500 பேர் இறந்ததாகவும், 1 லட்சத்து 95 ஆயிரம் பேர் வசித்த நாகசாகியில் 64 ஆயிரம் பேர் இறந்ததாகவும், 70 சதவீத கட்டடங்கள் சேதமானதாகவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

ரஷியாவிடம் தற்போது, ​​6257 மொத்த போர்க்கப்பல்களும் உள்ளன. உலகின் மற்ற நாடுகளை விட ரஷியாவிடம் அதிக அணு ஆயுதங்கள் இருக்கிறது. பராமரித்து வருகிறது. 6257 அணு ஆயுதங்கள் ரஷியாவிடம் உள்ளன. இவற்றில், 1458 அணு ஆயுதங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. 3039 அணு ஆயுதங்கள் செயல்படுத்தப்படாததும், 1760 அணு ஆயுதங்கள் செயலற்றதுமாக தற்போது ரஷியாவிடம் உள்ளன. மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவை விட இது அதிக எண்ணிக்கை. இதனால் தான் உலக நாடுகள் போர் சூழலில் ரஷியாவைப் பார்த்து பயப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் 5550 அணு ஆயுதங்கள் உள்ளன. அதில் 1389 செயல்பாட்டிலும், 2361 செயல்படுத்தப்படாமலும் உள்ளன. அதேபோல் 1800 அணு ஆயுதங்கள் செயலிழந்ததும் உள்ளன. ரஷியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவிடம் 350 அணு ஆயுதங்கள் உள்ளன. பிரான்ஸில் 290 அணு ஆயுதங்களும், இங்கிலாந்தில் 225 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானில் 165 அணு ஆயுதங்களும், இந்தியாவில் 156 அணு ஆயுதங்களும், இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்களும், வடகொரியாவிடம் அதிகபட்சமாக 50 அணு ஆயுதங்களும் கையிருப்பில் உள்ளன.

மேலும் ரஷிய ராணுவ அமைச்சர், ராணுவ தலைமை தளபதி உள்ளிட்டோருடன் அதிபர் புடின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அணு ஆயுதப் படைப் பிரிவுகளை தயார் நிலையில் இருக்கும்படி புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்துடன், ரஷிஷ்யா படைகளை இறக்கியுள்ளது. இந்நிலையில், புதினின் புதிய உத்தரவு, அணு ஆயுதப் போருக்கு வித்திடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

விளாடிமிர் புதின் உக்ரைனுக்கு எதிராக தெர்மோபரிக் ஆயுதங்களைப் பயன்படுத்தினால், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவத் தாக்குதல் பயங்கரமான திருப்பத்தை எடுக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தெர்மோபரிக் ஆயுதங்கள் மிகவும் கொடூரமான போர் ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

உக்ரைனுக்குள் படைகளை நகர்த்தி வரும் ரஷியா, வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தந்தை என கருதப்படும் சக்தி அதிகரிக்கப்பட்ட தெர்மோபாரிக் என்னும் வெப்ப அழுத்த வெடிகுண்டுகளை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுகுண்டுக்கு அடுத்தப்படியாக மிக மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடியவை இந்த வெப்ப அழுத்த வெடிகுண்டுகள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டுக்குள் உள்ள அமிலம் மற்றும் எரிபொருள் கலவை வெடித்தால் சூப்பர் சோனிக் அலை உருவாகி மனிதர்கள் , கட்டிடம் என எல்லாவற்றையும் அழிக்கும் என கூறப்படுகிறது.

கீவ் நகருக்குள் ரஷியா நகர்த்தி வரும் ராணுவ தளவாடங்களில் வெப்ப அழுத்த வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை ஏவும் டி ஓஎஸ்-1 வகை லான்சர்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெப்ப அழுத்த வெடிகுண்டுகளை சிரியா மற்றும் செசன்யா போர்களில் ஏற்கனவே ரஷியா பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.