இந்திய திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும் தெலுங்கு திரை உலக ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அடுத்ததாக சமீபத்தில் வெளிவந்து இந்திய அளவில் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆன புஷ்பா திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளாதாக அதிகாரப்பூர்வமாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

முன்னதாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் நடிகர் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் காட்ஃபாதர் படத்தில் நடித்துவரும் சிரஞ்சீவி,இதனைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி இயக்கத்தில் #Chiru155 திரைப்படத்திலும், சலோ மற்றும் பீஷ்மா ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனர் வெங்கி குடுமலா இயக்கும் #Chiru156 புதிய படத்திலும் நடிக்கவுள்ளார் 

இந்த வரிசையில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் போலா ஷங்கர் படத்திலும் சிரஞ்சீவி தற்போது நடித்து வருகிறார். போலா ஷங்கர் படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். AK என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிக்கும் போலா ஷங்கர் படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.

மேலும் ரகு பாபு, ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, ரவி சங்கர், வெண்ணெலா கிஷோர், துளசி, பிரகதி, ஸ்ரீமுகி, ராஷ்மி கௌதம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டட்லே ஒளிப்பதிவு செய்துள்ள போலா ஷங்கர் படத்திற்கு மகதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் போலா ஷங்கர் திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரோமோ தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ இதோ…