உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரில் இன்று காலை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது 5 வது நாளாக நீடித்து வருகிறது. இதனால், போர் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இந்த போரில், அதிக போர் தளவாடங்களை கொண்டு உலக அளவில்  2 ஆம் இடத்தில் உள்ள ரஷ்யாவிற்கும், 22 வது இடத்தில் உள்ள உக்ரைனுக்கும் தான் இப்படியான ஒரு கொடூரமான போர் நடந்துக்கொண்டிருக்கும் சூழலில், இதில் உக்ரைனே அதிகமாகமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், உக்ரைனக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளும் தங்களது போர் தளவாடங்களை கொடுத்து, உக்ரைனுக்கு ஆதரவாக நிற்பதால், ரஷ்யாவும் பொருளாதார அளவில் மிகப் பெரிய அளவில் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரஷ்யா பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

அந்த வகையில், இந்த போரில் உக்ரைன் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு வேறொரு வகையில் ரஷ்யாவும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ரஷிய தாக்குதலால் உருக்குலைந்த உக்ரைனில் சிக்கி தவித்த 21 தமிழக மாணவர்கள் உள்பட 900 இந்தியர்கள் 4 விமானங்கள் மூலம் நாடு திரும்பினர். சென்னை வந்த மாணவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளை தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இதுவரை உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9 வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக” கூறினார். 

மேலும், “உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓயமாட்டேன்” என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தான், உக்ரைனின் கார்கிவ் நகரில் கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா என்ற இளைஞர், அந்நாட்டில் 4 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

இந்த நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த ரஷ்ய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா என்பவர், குண்டடிப்பட்டு பரிதாபமாக இன்று உயிரிழந்து உள்ளார். 

இது குறித்து தகவலை, மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி உறுதி செய்து உள்ளார். இந்த விசயம், சக இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதனிடையே, உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று காணொலி மூலம் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.