மெக்சிகோவில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல்  நடுரோட்டில் அவர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தியது இதில் 17 பேர்  பலியாகினர்.

mexico crimeமெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மிச்சோகன் மாகாணத்தில் உள்ள சன் ஜோஷி டி கிரேசியா நகரின் தெருவில் நேற்று ஒரு இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் சிலர் பங்கேற்றனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்த கும்பல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 17 பேரை அந்த பகுதிக்கு அருகே உள்ள சாலைக்கு அழைத்து வந்தனர். பட்டப்பகலில் நடுரோட்டில் அவர்கள் அனைவரும் தங்கள் தலைக்கு பின்புறம் கைகளை கட்டியவாறு, பிணைக்கைதிகள் போன்று திரும்பி நின்றனர். அப்போது, துப்பாக்கி ஏந்திய கும்பல் அந்த கும்பல் கைகளை கட்டியவாறு நின்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது.

மேலும் இந்த கொடூர தாக்குதலில் 17 பேரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டியில் இருந்தவர்கள் தங்கள் செல்போனியில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது. பட்டப்பகலில், சாலையின் நடுவே 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதலில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.