மதில் மேல் காதல் பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | February 28, 2022 23:42 PM IST
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்த முகென் ராவ், தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கினார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ் தமிழில் பல சுயாதீன பாடல்களை பாடியுள்ளார்.
முன்னதாக இயக்குனர் கவின் இயக்கத்தில், ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் ரிலீஸான வேலன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தை சில வாரங்களுக்கு முன் முகேன் ராவ் தொடங்கினார்.
அடுத்ததாக வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில், ஷீரடி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், உருவாகும் மதில் மேல் காதல் படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜீவி பிரகாஷின் பேச்சுலர் படத்தின் கதாநாயகி திவ்யபாரதி நடித்துள்ளார். மேலும் சாக்ஷி அகர்வால் & KPY பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதில் மேல் காதல் திரைப்படத்திற்கு கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் முகேன் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடிக்கும் மதில் மேல் காதல் படத்தின் முதல் பாடல் வருகிற மார்ச் 2ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#ShirdiProductionNO2 -
— CtcMediaboy (@CtcMediaboy) February 28, 2022
Madhil Mel Kaadhal Update❤️
First Single Releasing on
3rd March 2022 @ 6PM
Watch this Space
From the director of "Veppam"#MMK#Madhilmelkadhaal@ShirdiProdn @AlikhanAnjana@nivaskprasanna @goutham_george @editoranthony @DoneChannel1@CtcMediaboy pic.twitter.com/kBQJqz3dGW