கணவரை ஏலத்துக்கு விட்ட மனைவி, “ரிட்டன் கிடையாது என கன்டிஷன்” போட்ட பிறகும், 12 பெண்கள் அவரை வாங்க சம்மதம் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“எதுவேண்டுமானாலும் ஆன்லைனில் விற்கலாம் என்பது போய், இப்போது கணவனையும் கூட ஆன்லைனில் விற்கலாம் என்கிற நிலை, இந்த நவீன உலுகில் வந்திருக்கிறது என்றால், நம்ப முடிகிறதா?” ஆம், நம்பித் தான் ஆக ஆவேண்டும். 

அயர்லாந்து நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, அயர்லாந்தை நாட்டைச் சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண், தனது கணவர் ஜான் மலிஸ்டர் உடன் வசித்து வந்தார்.

இப்படியான சூழலில் தான், கணவன் - மனைவிக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டதோ தெரியவில்லை. ஆனால், “எனது கணவனை ஏலத்தில் விற்கப்போவதாக” அவரது மனைவி லிண்டா மலிஸ்டர் இணைய தளத்தில் விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார்.

அதன் படி, “எனது கணவர் ஜானுக்கு 37 வயது ஆகிறது. 

இவர் 6.1 அடி உயரம் கொண்டவர். 

படப்பிடிப்பு மற்றும் மீன்பிடிக்க விரும்புவார்.

மிகவும் நல்லவர்.

இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். 

இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு. 

அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார்.

ஆனால், இன்னும் சில வீட்டு பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது. 

ஆனால், அதற்கான பொறுமையோ, நேரமோ எனக்கு கிடையாது. 

இந்த விற்பனை இறுதியானது. 

குறிப்பாக, ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது”

- என்று, கணவனை ஏலம் விடுவது தொடர்பான விளம்பத்தில், இவை யாவையும், அந்த பெண் குறிப்பிட்டு உள்ளார். 

அந்த விளம்பத்திலேயே “ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது” என்று கூறியதுதான் ஹைலைட்.

அயர்லாந்தை நாட்டைச் சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண், தனது கணவர் ஜான் மலிஸ்டர் பற்றி விளையாட்டாக இப்படி ஒரு விளம்பத்தைப் போட்டிருந்த போதிலும், இது உண்மை என நம்பிய அந்நாட்டைச் சேர்ந்த 12 பெண்கள், ஜானை ஏலத்தில் எடுக்க சம்மதம் தெரிவித்து ஏலத்தில் பங்கேற்று ஜானை வாங்க முயற்சி செய்து உள்ளனர்.

மேலும், இப்படியான இந்த விளம்பரத்தை பார்த்து ஜானின் நண்பர்கள், இந்த விளம்பரத்தைப் பற்றி ஜானுக்கு தெரிவித்து உள்ளனர். இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அவர், “நீங்கள் சொல்லும் வரையில், எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது” என்றும், அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.

பிறகு, வீட்டிற்கு வந்த ஜான், இது பற்றி தனது மனைவியிடம் கேட்டபோது, கணவன் - மனைவி என இருவரும் இது பற்றி பேசி மணிக்கணக்கில் சிரித்துகொண்டனர். இதன் மூலமாக, இந்த விளம்பரம் காமெடியாக பகிரப்பட்டது என்பது தெரிய வந்தது.

என்றாலும், உலகிலேயே “கணவர் விற்பனைக்கு” என்று வெளியிடப்பட்ட முதலாவது விளம்பரம் இது” என்பது குறிப்பிடத்தக்கது.