ஒரு பெண் தனது 28 வயதிற்குள் 8 பேரை மோசடியாக ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்ட சம்பவத்தை கேள்விப்பட்டு, போலீசாரே கடும் அதிர்ச்சியில் உரைந்துபோய் உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தாய்லாந்து நாட்டில் டாட்டூ கலைஞரான தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர், தான் போகும் இடமெல்லாம் அடுத்தடுத்து பெண்களை திருமணம் செய்துகொண்டு வந்த நிலையில், கணவனின் செயல்களை ஒவ்வொரு மனைவிகளும் கண்டுப்பிடித்ததால், தான் திருமணம் செய்த 8 மனைவிகளையும் அந்த கணவன் ஒரே வீட்டில் தங்க வைத்து வசித்து வரும் சம்பவம், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது.

தற்போது, அந்த நபருக்கே டப் கொடுக்கும் வகையில், இந்தியாவில் ஒரு பெண், 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் மோசடியாக பணம் மற்றும் நகைகளை அள்ளிக்கொண்டு சென்ற சம்வம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஊர்மிளா அஹிர்வார் என்று பெண் வசித்து வருகிறார். இவருக்கு ரேணு ராஜ்புத் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

அத்துடன், 28 வயதான ஊர்மிளா எங்கெல்லாம் செல்கிறாரோ, அந்த ஊரில் எந்தெந்த ஆண்களை பார்க்கிறாரோ, எந்த ஆண்களை எல்லாம் இவருக்குப் பிடிக்கிறதோ, அவர்களிடம் எல்லாம் தனது பெயரை புதிது புதிதாக மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டு, அவர்களிடம் அறிமுகம் ஆகி பழகிவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சற்று வசதியான ஆண்களுக்கு மட்டுமே இவர் குறிவைத்து அடுத்த சில நாட்களில் அந்த ஆண்களை தனது காதல் வளைத்து மயக்கி விழ வைத்து, அவரையே அடுத்த சில நாட்களில் திருமணமும் செய்து கொள்வார் என்றும், அப்படி திருமணம் செய்துகொள்ளும் நபர்களிடம் சமயம்பார்த்து, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவதையும், இவர் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதன் படி, ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, மத்தியப் பிரதேசத்தின் தாமோ, சாகர் போன்ற இடங்களில் இவர் அடிக்கடி ஊர் சுற்றி வந்து உள்ளார் என்றும், இவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. 

குறிப்பிட்ட இந்த ஊர்களில் உள்ள பெரும் பணக்கார இளைஞர்களை தான், இந்த பெண் குறிவைத்து வரிசையாக திருமணம் செய்து தனது காதல் வலையில் வளைத்து போட்டு ஏமாற்றி வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக, அந்த பெண்ணை கல்யாணம் செய்து பாதிக்கப்பட்டதுடன், நகை மற்றும் பணத்தையும் இழந்து அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்கள் ஒவ்வொரும், இந்த பெண்ணை பற்றி விசாரிக்கத் தொடங்கிய நிலையில், அவர்கள் அனைவருக்கும் இந்தப் பெண்ணைப் பற்றிய ரகசியம் தெரிய வந்திருக்கிறது.

இதனால், இந்த பெண்ணை திருமணம் செய்து ஏமார்ந்த பாதிக்கப்பட்ட கணவன்கள் அனைவரும், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இப்படியாக, பாதிக்கப்பட்ட பலரும், ஊர்மிளா மீது காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த போலீசார் இது தொடர்பாக, வழங்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கினார். போலீசார், களத்தில் இறங்கி இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஊர்மிளாவுக்கு 7 கல்யாணம் ஆகியிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 

குறிப்பாக, 8 வது கல்யாணத்துக்கு தஷ்ரத் படேல் என்ற இளைஞருக்கு, அந்த பெண் வலை வீசியதும் தெரிய வந்தது. அந்த இளைஞர் சியோனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதையும் போலீசார் கண்டுப்பிடித்தனர்.

இது தொடர்பாக விசாரித்தப்போது, “ஊர்மிளாவின் அழகில் மயங்கிய அந்த தஷ்ரத் படேல் என்ற இளைஞர், எந்த விஷயமும் தெரியாமல் அந்த பெண்ணை 8 வதாக திருமணமும் செய்துகொண்டு உள்ளார். 

இதனையடுத்து, தஷ்ரத் படேல், தனது புது மனைவியை, அவரது சொந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நேரில் அழைத்து சென்று காட்ட வேண்டும் என்று விரும்பி இருக்கிறார். இதற்காக, வீட்டில் உள்ள எல்லா நகைகளையும் தனது மனைவிக்கு அணிவித்து, அவரை காரில் உட்கார வைத்து கிளம்பி சென்றிருக்கிறார்.

ஆனால், “பெயர் தெரியாத கிராமத்தில் போய் மாட்டிக்கொண்டால், அங்கிருந்து திரும்ப முடியாது என்று யோசித்த” ஊர்மிளா, போகும் போதே, பாதி வழியிலேயே திடீரென தனக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி, திடீரென்று நாடகமாடி இருக்கிறார்.

அதன் பிறகு, வேண்டுமென்றே கணவனிடம் சண்டைப் போட்டு, அந்த காரில் இருந்தும் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது, ஊர்மிளா இறங்கிய இடத்தில், ஏற்கனவே ஒரு இளைஞர் தயாராக பைக்கில் காத்திருந்த நிலையில், கணவனிடம் இருந்து எடுத்துக்கொண்ட நகைகள் மற்றும் பணத்துடன், அந்த பைக்கில் ஏறி கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார்.

இவற்றைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த 8 வது கணவன் படேல், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த நிலையில், இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால், போலீசார் ஏற்கனவே ஊர்மிளாவை தேடி வந்த நிலையில், ஊர்மிளாவை விரட்டிப் பிடித்து அதிரடியாக கைது செய்தனர். 

அதன் தொடர்ச்சியாக, ஊர்மிளாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான், அவர் இது வரை 8 ஆண்களை ஏமாற்றி மோசடியாக 8 கல்யாணம் செய்த விஷயமும் போலீசாருக்குத் தெரிய வந்தது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.