வந்தா ராஜாவா தான் வருவேன்... சிலம்பரசன் TR-ன் ட்ரெண்டிங் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ!
By Anand S | Galatta | February 04, 2022 11:44 AM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.T.R இயக்குனர் மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி-யின் வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய திரைப்படங்களின் சமீபத்தில் மிகவும் பருமனாக 105 கிலோ உடல் எடையுடன் இருந்தார். சிறந்த நடிகர், டான்ஸர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வந்த சிலம்பரசன்.T.R உடல் பருமன் காரணமாக பல விமர்சனங்களை சந்தித்தார். கிட்டத்தட்ட அவ்வளவுதான் சிலம்பரசன்.T.R.-ன் சினிமா பயணம் எனும் அளவிற்கு பல விதமான பேச்சுகள் நிலவின.
இந்த அனைத்து பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒட்டுமொத்த திரையுலகையும், சினிமா ரசிகர்களையும், சிலம்பரசனின் ரசிகர்களையும் திகைக்க வைக்கும் விதத்தில் அதிரடியான கம்பேக் கொடுத்தார் சிலம்பரசன்.T.R . கடுமையான உடற்பயிற்சிகள், நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, கலரி, பேட்மிட்டன், டென்னிஸ், ஃபுட்பால், கிரிக்கெட், கூடைப்பந்து, பரதநாட்டியம், வாள்வீச்சு உள்ளிட்ட பல பயிற்சிகள் மேற்கொண்டு 102 கிலோவிலிருந்து 78 கிலோவாக வேற லெவல் ட்ரன்ஸ்ஃபர்மேஷனுக்கு உன்னை ஆட்படுத்திக் கொண்டார்.
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிம்புவின் இந்த கம்பேக் திரையுலகிலும் தொடர்ந்தது. முன்னதாக கடந்த ஆண்டு(2021) பொங்கல் வெளியீடாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய சிலம்பரசன்.T.R கடந்த ஆண்டின் இறுதியில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் மூலம் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக எதிர் வந்த விமர்சனங்களை சிதறடித்தார்.
விண்ணைத்தாண்டி வருவாயா & அச்சம் என்பது மடமையடா திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் உடன் மீண்டும் இணைந்துள்ள நடிகர் சிலம்பரசன் வெந்து தணிந்தது காடு படத்தில் தற்போது நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்துவரும் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்திலும் நடிக்கவுள்ளார்.
திரைப்பயணத்தில் மீண்டும் வெற்றி பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் சிலம்பரசன் தனது இந்த மாஸ்ஸான ட்ரான்ஸ்ஃபர்மேஷனுக்காக மேற்கொண்ட அனைத்து பயிற்சிகள் மற்றும் சிலம்பரசனின் கடின உழைப்பை வெளிப்படுத்தும் விதமாக ஆத்மன் வீடியோ, நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளான நேற்று(பிப்ரவரி 3-ம் தேதி) வெளியானது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் மிரட்டலான அந்த வீடியோ இதோ…