ரஷ்ய தாக்குதலால் சின்னாபின்னமான உக்ரைன்  நாட்டின் போர் நடந்த கீவ் நகர வீதிகளில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி உடன் நடந்து சென்று தில்லாக பார்வையிட்ட சம்பவம், உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.

ரஷியா - உக்ரைன் போர் இன்றுடன் 46 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. 

அந்த வகையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

வதாகவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தம் வண்ணம் உள்ளன.

இதில் உச்சக்கட்ட கொடூரமாக, “உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களது உடலில் வெறிப்பிடித்த ரஷ்ய வீரர்கள் முத்திரை குத்தி அடையாளம் படுத்துவது தொடர்பான படங்களும் வெளியாகி” உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன், உக்ரைன் வீதிகளில் பல 100 க்கணக்கான அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், ஐ.நா.வில் இருந்து ரஷ்யாவை தற்காலிக நீக்கம் செய்து, ஐ.நா. சபை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

மேலும், ரஷியா - உக்ரைன் போர் தொடங்கிய சில சில நாட்களிலேயே அந்நாட்டின் தலைநகரான கீவ் தலைநகர், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற தகவலும் வெளியானது. ஆனால், இப்போது வரை கீவ் நகரை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை.

ஆனால், இந்த போரால் கீவ் நகரில் மிக கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனனினும், உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றன.

இந்த நிலையில் தான், உக்ரைனின் ஆதரவு நாடுகளில் ஒன்றாக திகழும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் நாட்டிற்கு முன்னதாக வருகை தந்தார்.

அவர், அங்கு போரால் பாதிக்கப்படட அந்நாட்டின் தலைநகர் கீவ் க்கு சென்று, அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கியை சந்திதார். 

அப்போது, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி ஆகிய இருவரும், கீவ் நகரின் போரால் பாதிக்கப்பட்ட முக்கிய வீதியில் நடந்தபடியே, அங்கு பாதிக்கப்பட்ட போர் பகுதிகளை ஆய்வு செய்படியே பேசிக்கொண்டு அந்த வீதியில் வீர நடைப் போட்டனர்.

குறிப்பாக, அங்கு தற்போது நிலவும் போர் நிலவரம் குறித்தும், அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், “உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி செய்வோம்” என்றும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் நாட்டில் போரால் பாதிக்கப்பட்ட கீவ் நகருக்கு செல்லும் வரை, இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

எனினும், ரஷியா - உக்ரைன் போர் உச்சக்கட்டமாக நடந்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில், கடுமையான போர் சூழலுக்கு மத்தியில், அதுவும் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரு நாட்டு தலைவர்களும் நேரில் நடந்துச் சென்று ஆய்வு செய்தது, உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வரும் நிலையில், இந்த சந்தித்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு ராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்க இங்கிலாந்து தற்போது முடிவு செய்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.