கன்னட திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த கேஜிஎஃப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கன்னடம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வெளியான கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டராக கொண்டாடப்பட்டது.

கேஜிஎஃப் சாப்டர் 1 திரைப்படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம். இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில்,  பிரம்மாண்டமான அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள கேஜிஎஃப் திரைப்படத்தை HOMBALE பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

அதிரடியான ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யாஷ் நடிக்க, ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 பட்த்தின் மிரட்டலான வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவில், ரவி பஸ்ருர் இசையமைத்துள்ள, கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் சிறப்பு ட்விட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரில் மாஸ் காட்டும் கேஜிஎஃப் ராக்கி பாய் எமோஜி இதோ…