உச்சக்கட்ட கொடூரமாக, உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களது உடலில் வெறிப்பிடித்த ரஷ்ய வீரர்கள் முத்திரை குத்தி அடையாளம் படுத்துவது தொடர்பான படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ரஷியா - உக்ரைன் போர் இன்றுடன் 40 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதாவது, உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தம் வண்ணம் உள்ளன.0

இந்த நிலையில் தான், ரஷ்யா தனது ஒட்டு மொத்த பலத்தை திரட்டி, உக்ரைன் மீது தொடர்ச்சியாக மிக கடுமையாக தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், “ரஷ்யா செய்வது போர் இல்லை, பயங்கராவதம்” என்று, புடினை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். 

உக்ரைன் போரில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகைளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்ய போர் வீரர்கள் பலரும், உடலுறவுக்காக உக்கிரமான பல்வேறு விதங்களில் கடுமையான கொடூரங்களை நிகழ்த்தி வருவதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.

இப்படியாக, ரஷ்ய வீர்ரகளின் பாலியல் பலாத்கார அட்டகாசங்கள், உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் தொடர்ந்து உக்கிரமாகி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே குற்றச்சாட்டைத் தான், கடந்த மாதமும்,  உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சரும் கூறியிருந்தார். அதுவும், “உக்ரைனில் உள்ள ஏராளமான பெண்களை, ரஷ்ய வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதாக” உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ரஷ்ய வீரர்கள் பலரும், 60 வயதுக்கு மேலான பெண்களை கூட விட்டு வைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்வதாகவும்” பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது உக்ரைன் நாட்டின் பெண் எம்.பி.யான Lesia Vasylenko லெசியா வாசிலென்க், தனது டிவிட்டரில், “ரஷ்ய வீரர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களின் உடலில் ரஷ்ய வீரர்கள் அடையாள சின்னமாக ஒரு முத்திரையை குத்துவதாகவும்” பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, எங்கள் நாட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை கொன்று குவித்து வருகின்றனர்” என்றும், பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

குறிப்பாக, “ரஷ்யா ஒரு ஒழுக்கமற்ற குற்றங்களின் தேசம்” என்றும், மிக கடுமையாகவே Lesia Vasylenko லெசியா வாசிலென்க், மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

முக்கியமாக, “அப்படி பாலியல் பலாத்காரலம் செய்யப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் முதுகில், ரஷ்ய வீரர்கள் 'கொக்கி சிலுவை வடிவில் ஸ்வஸ்திகா' சின்ன தீக்காயங்களுடன் முத்திரையானது 10 வயது சிறுமிகள் முதல்கொண்டு, அவர்களது உடல்களில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும்” ஆதாரத்துடன் குற்றம்சாட்டி உள்ளார். 

அதே போல், “பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சிறுமிகளின் உடல் உறுப்புகள் மற்றும் மலக்குடல் பகுதிகள் யாவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ரஷ்ய ஆண்கள் இதைச் செய்தார்கள்” என்றும், மிக கடுமையாக விமர்சித்து உள்ளார். 

“ரஷ்ய தாய்மார்கள் இப்படிதான் அவர்களை வளர்த்தனர் என்றும், ஒரு ஒழுக்கக்கேடான குற்றவாளிகளின் தேசம் ரஷ்யா” என்றும், அவர் மீண்டும் விமர்சித்து உள்ளார்.

மிக முக்கியமாக, “பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்கள் பலரும் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டனர் என்றும், அவர்களது உடல்” என்று, சில பெண்களின் புகைப்படங்களையும் அவர் தனது டிவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இந்த செய்தியானது, தற்போது உலகம் முழுவதும் பெரும் வைராகி வருவதுடன், ரஷ்யா மீதான கோபத்தை உலகம் முழுவதிலும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tortured body of a raped and killed woman. I’m speechless. My@mind is paralyzed with anger and fear and hatred. #StopGenocide #StopPutinNOW pic.twitter.com/Kl0ufDigJi

— Lesia Vasylenko (@lesiavasylenko) April 3, 2022