தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சதீஷ் தமிழ் படம், மதராசபட்டினம், எதிர்நீச்சல், கத்தி, ஆம்பள, ரெமோ, பைரவா, தமிழ் படம் 2, அண்ணாத்த என தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியுள்ள நடிகர் சதீஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நாய் சேகர் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

1978-ல் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான சட்டம் என் கையில் படத்தின் டைட்டிலில் உருவாகியுள்ள புதிய படமான சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பாவல் நவகீதன், வித்யா பிரதீப், ரித்திகா, வெண்பா, மைம் கோபி, KPY சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இயக்குனர் சச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள சட்டம் என் கையில் திரைப்படத்தை சண்முகம் கிரியேஷன்ஸ், க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேஷன்ஸ் மற்றும் சிட்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. P.G.முத்தையா ஒளிப்பதிவில் M.S.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள சட்டம் என் கையில் படத்திற்கு கதிரேசன் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.இந்நிலையில் சதீஷின் சட்டம் என் கையில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…