இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சரோஜா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் வைபவ்.  மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா மற்றும் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்த வைபவ் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் ஈசன் திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தது தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடம் பிடித்தார்.

அடுத்தடுத்து டமால் டுமீல், மேயாத மான், கப்பல், சிக்ஸர், RK நகர் மலேசியா டு அம்னீசியா என பல படங்களில் நடித்துள்ளார் வைபவ். இதனையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் ஃபேண்டசி நகைச்சுவை திரைப்படமாக தயாராகியுள்ள ஆலம்பனா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள வைபவ், ஹாரர் காமெடி திரைப்படமாக விரைவில் வெளிவர உள்ள காட்டேரி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் அடுத்ததாக வைபவ் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் பபூன். வைபவ் உடன் இணைந்து கதாநாயகியாக நடிகை அனகா நடிக்க, ஜோடி ஜார்ஜ், ஆடுகளம் நரேன், மூனார் ரமேஷ், தமிழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பபூன் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் PASSION ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பபூன் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த பபூன் படத்தின் டீசர் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது பபூன் படத்திலிருந்து மடிச்சு வெச்ச வெத்தல பாடல் வெளியானது. கலக்கலான மடிச்சு வெச்ச வெத்தல பாடல் கீழே உள்ள லிங்கில் கண்டு ரசியுங்கள்.