இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தளபதி67 திரைப்படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி66. முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் தளபதி66 திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷியாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, குஷ்பு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் தளபதி66 திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி   ஒளிப்பதிவு செய்ய, தமன்.S இசை அமைக்கிறார். இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கபடும் தளபதி 66 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 மணி அளவில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

HE IS RETURNING...#Thalapathy66FLon21st #Thalapathy66

Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/vXddUbOSzA

— Sri Venkateswara Creations (@SVC_official) June 19, 2022