நீண்ட இடைவெளிக்கு பின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதோடு தமிழக பாக்ஸ் ஆபீஸில் ஆல் டைம் ரெக்கார்ட்டாக வசூல் சாதனை படைத்துள்ளது.

உலகநாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என் இயக்கத்தில் பக்காவான ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக தயாராகி இருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக காட்சிக்கு காட்சி ஸ்டண்ட்டில் அதிரடி காட்ட, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில் அனிருத் இசையில், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் அனுபவத்தை விக்ரம் திரைப்படம் கொடுத்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாஸில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நரேன், செம்பன் வினோத், ஜாபர், காளிதாஸ் ஜெயராம், சந்தானபாரதி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். க்ளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும் அந்த சிறிய நேரத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா மிரட்டினார். 

குறிப்பாக விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் டீணா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வசந்தி அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். ஆரம்பம் முதல் வீட்டில் வேலைக்காரியாக இருந்து திடீரென ஏஜென்ட் டீணாவாக டிரன்ஸ்ஃபர்மேஷன் ஆகும் அந்த காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்குகளும் அதிர்ந்தன. இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்திலிருந்து ஏஜென்ட் டீணாவின் ப்ரோமோ வீடியோ வெளியானது. மாஸான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…