முதலிரவில்.. “அக்காவுடன் நான் எப்படி தண்ணி அடிக்கிறேன் பாருங்க.. எனக்கு இந்த சரக்கு இப்பவே வேணும்..” அடம் பிடித்த மனைவி ஓட்டம்..

முதலிரவில்.. “அக்காவுடன் நான் எப்படி தண்ணி அடிக்கிறேன் பாருங்க.. எனக்கு இந்த சரக்கு இப்பவே வேணும்..” அடம் பிடித்த மனைவி ஓட்டம்.. - Daily news

முதலிரவு ரூமுக்குள் நுழைந்ததுமே, கல்யாண பெண் “நான் என் அக்காவுடன் சேர்ந்து எப்படி தண்ணி அடிக்கிறேன் பாருங்க.. எனக்கு இந்த சரக்கு இப்பவே வேணும்..” என்று, அடம் பிடித்த மனைவி, அடுத்த 2 வது நாளே பணம் மற்றும் நகைகளுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதுவும் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை பள்ளிகரணை பகுதியை சேர்ந்த 32 வயதான தமிழ்வாணன், இன்னும் கல்யாணம் ஆகாத நிலையில், திருமணத்திற்கு வரன் தேடி உள்ளார். 

அப்போது, சேலத்தைச் சேர்ந்த தரகர் மகேஷ் என்பவர் அவருக்கு அறிமுகமாகி, “எனக்கு தெரிந்த பெண் ஒருவர் விருதுநகரில் இருப்பதாக” கூறியிருக்கிறார். 

இதனை நம்பிய தமிழ்வாணன், அந்த பெண்ணை உடனே பார்க்க முடிவு செய்து, தனது பெற்றோருடன் விருதுநகருக்கு சென்று உள்ளார். 

அப்போது, அங்குள்ள ஒரு முருகன் கோயிலில் வைத்து, அந்த பெண்ணை வரவழைத்து பார்த்து உள்ளனர். 

அப்போது, அந்த தரகர்கள் இரண்டு பேர் மணப்பெண் பூஜாவை, தமிழ்வாணனுக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர். 

மணப்பெண்ணை பார்த்ததுமே தமிழ்வாணனுக்கு பிடித்துவிடவே, பூஜாவுக்கும் தமிழ்வாணனை பிடித்து விட்டது. 

இதனால், அன்றைய தினமே கல்யாணத்தையும் முடித்து விடலாம் என்று, பூஜா வீட்டில் சார்பில் வந்த இருவர் யோசனை சொல்ல அப்போது, அங்கு அது முருகன் கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்து உள்ளது. 

அதாவது, கடந்த 14 ஆம் தேதி காலையில் பெண் பார்க்கும் படலம் நடந்த நிலையில், அன்று மாலையில் அவர்களது கல்யாணம் நடந்து உள்ளது. இந்த திடீர் கல்யாணத்தில், இரு வீட்டு பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 

திருமணம் முடிந்த மறுநாள் 15 ஆம் தேதி காலை உறவினர்களுக்கு பூஜாவை திருமணம் செய்து கொண்டதாக தமிழ்வாணன், அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். 

பின்னர், 16 ஆம் தேதி, தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்று, தனது மனைவிக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பட்டு புடவையும் வாங்கி கொடுத்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, நேற்று 17 ஆம் தேதி, மளிகை பொருட்களை வாங்க பள்ளிகரணையில் உள்ள பிரபல கடைக்கு அவர்கள் இருவரும் சென்று உள்ளனர். ஆனால், “எஸ்கலேட்டரில் ஏற எனக்கு பயமாக இருக்கிறது என்றும், இதனால் நான் படிக்கெட்டு வழியாக கீழே இறங்கி வருவதாகவும்” பூஜா கூறியிருக்கிறார்.

ஆனால், பூஜாவை கீழேயும் காணவில்லை. இதனால், அவருக்கு போன் செய்தபோது, “நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த அப்பாவி கணவன், வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளார். ஆனால், மனைவி பூஜா வீட்டில் இல்லை. மாறாக, வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணமும், பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. அப்போது, அந்த பெண்ணுக்கு அவர் போன் செய்த போது, அவர் போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், மனைவி பூஜா மற்றும் 2 தரகர்கள் மீது புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து புகாரில், “திருமணத்திற்கு 1.5 லட்சம் தர வேண்டும் என, தரகர் பேரம் பேசிய நிலையில், கையில் இருந்த 1.35 லட்சம் அப்பொழுதே கொடுத்துவிட்டேன் என்றும், மீதமுள்ள 15 ஆயிரத்தை கொடுக்கவில்லை என்றால், முதலிரவு நடக்க விடமாட்டோம் என்று தரகர்கள்  என்னை மிரட்டினார்கள்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

குறிப்பாக, “முதலிரவு அன்று ரூமுக்குள் சென்றதும், என் மனைவி பூஜா, “எனக்கு உடனே மதுபாட்டில் வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்தார் என்றும், அதற்கு நான் மறுத்தபோது, தன்னுடைய வாட்ஸ்ஆப்பில் உள்ள வீடியோ காட்டி, நானும் என் அக்காவும் எப்படி தண்ணி அடிக்கிறோம் பாருங்க. எனக்கு அந்த மதுபாட்டில் தான் வேண்டும், அதுவும் இப்பவே வேண்டும்” என்று, அடம் பிடித்தார்” என்றும், கூறியிருக்கிறார்.

எனினும், “நான் மதுபாட்டிலை வாங்கி தர மறுத்துவிட்டேன் என்றும், இதனால் முதலிரவுக்கு அவள் சம்மதிக்கவில்லை” என்றும் கூறியுள்ளார். 

“இப்படியாக, திருமணம் என்ற பெயரில் பணம் மோசடி செய்யும் இது போன்ற கும்பலை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எனக்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் இது போன்ற நடக்ககூடாது” என்றும், பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி ஆண், புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Comment