ரசிகர்களின் ஃபேவரட்டான ரேடியோ ஜாக்கியாகவும் தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராகவும் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த RJ.பாலாஜி தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி, முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக RJ.பாலாஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த LKG திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெற்றது.

இதனையடுத்து நயன்தாராவுடன் இணைந்த RJ.பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வரிசையில் அடுத்ததாக RJ.பாலாஜி இயக்கி நடித்துள்ள திரைப்படம் வீட்ல விசேஷம்.

பாலிவுட்டில் ஹிட்டடித்த பதாய் ஹோ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக வீட்ல விசேஷம் திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி-NJ.சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். வீட்ல விசேஷம் படத்தில் ஊர்வசி, சத்தியராஜ், லலிதா, அபர்ணா பாலமுரளி, புகழ், யோகிபாபு, ஷிவானி நாராயணன், பவித்ரா லோகேஷ், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வீட்ல விசேஷம் திரைப்படத்திலிருந்து தற்போது ஃபேமிலி பாட்டு வீடியோ பாடல் வெளியானது. அந்த ஃபேமிலி பாட்டு வீடியோ பாடல் இதோ…