உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் சாதனை படைத்த அனைத்து திரைப்படங்களையும் பின்னுக்குத்தள்ளி விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் ALL TIME RECORD செய்துள்ளது.

உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் FAN BOY சம்பவமாக வெளிவந்திருக்கும் விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நரேன், செம்பன் வினோத், ஜாபர், காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் இயக்கத்தில் பக்காவான அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்திருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் விக்ரம் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

தொடர்ந்து திரையரங்குகளில் HOUSE FULL காட்சிகளாக வெற்றி நடை போட்டு வரும் விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்திலிருந்து தற்போது அதிரடியான புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…