பட்டாம்பூச்சி படத்தின் விறுவிறுப்பான ப்ரோமோ!
By Anand S | Galatta | June 19, 2022 11:35 AM IST

தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. முன்னதாக பிரேக்கிங் நியூஸ் மற்றும் எண்ணித்துணிக ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன.
தொடர்ந்து இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் ஜெய் கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் ஜீவாவுடன் இணைந்து இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் காஃபி வித் காதல் படத்தில் நடித்துள்ளார். இந்த வரிசையில் ஜெய் மற்றும் சுந்தர்.C இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி.
இயக்குனர் பத்ரி நாராயணன் எழுதி இயக்கியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தை AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ளார். ஹனி ரோஸ் கதாநாயகியாக நடிக்க, இமான் அண்ணாச்சி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், நவநீத்.S இசையமைத்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார்.
சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவரவுள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் பட்டாம்பூச்சி திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. விறுவிறுப்பான பட்டாம்பூச்சி பட ப்ரோமோ வீடியோ இதோ…