டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தின் போது, போலீசாரின் தாக்குதலுக்கு ஆளான கரூர் எம்.பி. ஜோதிமணி, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம், டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி, கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ச்சியாக 3 நாட்கள்  ெடல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதற்கு  எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்  நடத்தினர். காங்கிரஸ் தலைமையகத்திற்குள் போலீசார் அத்துமீறி உள்ளே நுழைந்து  தாக்கியதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

அதாவது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 3 நாட்கள் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

அப்போது, முதல் நாள் ஆஜராவதற்கு முன்பாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சியினர் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு நடைபெற்ற மாபெரும் பேரணியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, அந்த பேரணியில் கலந்துகொண்டு, பேரணியாக நடந்து வந்தே, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். 

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையகத்திற்குள் போலீசார் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்கியதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் அதிரடியாக குற்றம்சாட்டினார்.

அத்துடன், காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய அந்த போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணியும், கலந்துகொண்டிருந்தார். 

அப்போது, எம்.பி. ஜோதிமணியும் மற்ற நிர்வாகிகளை போன்று டெல்லி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது, அங்கு ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக போலீசார் போராட்டக்காரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில், எம்.பி. ஜோதிமணியின் ஆடை கிழிந்து தொங்கி உள்ளது. இந்த கிழிந்த ஆடைகளுடன், அலங்கோலமான முகத்துடனே கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, போலீசாரின் வாகனத்தில் வலுகட்டாயமாக ஏற்பட்டார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, போலீசார் வாகனத்தில் ஏறியதும், தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் குறித்தும், போலீசார் தன்னை தாக்கியதாகவும் ஆவேசமாக பேசி, வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் வைரலானது.

மேலும், இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவி அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்த பிரச்சனை தொடர்பாக வரும் 20ஆ ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச்  சந்தித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு  வலியுறுத்த இருக்கிறார்.

குறிப்பாக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடிதம் எழுதி உள்ள எம்.பி. ஜோதிமணி, “காங்கிரஸ்  தலைமையகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போது, என்னையும் எங்களது  கட்சியின் சக எம்.பி.க்களையும் போலீசார் தாக்கினர்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால், “டெல்லி காவல் துறைக்கு எதிராக சிறப்புரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் போலீசார் தாக்கியதில், உடம்பு வலி உள்ளிட்ட பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஜோதிமணி, தற்போது டெல்லி டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.