படத்திற்கு படம் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி ஸ்டைலில் நடித்து பல கோடி ரசிகர்களின் மனதில் ஃபேவரட் ஹீரோயினாக திகழும் நடிகை த்ரிஷா கடைசியாக இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் வசீகரமாக நடித்து அனைவரது இதயங்களிலும் நிறைந்தார். 

விரைவில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக எக்கசக்கமான எதிர்ப்பார்ப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் இணையும் தளபதி 67 படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக த்ரிஷா நடிப்பில் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக தி ரோட் திரைப்படமும் தயாராகி வருகிறது.

இதனிடையே த்ரிஷாவின் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ராங்கி திரைப்படம் நீண்ட காத்திருப்பதற்குப் பிறகு வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.. இயக்குனர் A.R.முருகதாஸின் கதையில், எங்கேயும் எப்போதும் & இவன் வேற மாதிரி படங்களின் இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்கள் தயாரித்துள்ளார்.

அனஸ்வரா ராஜன், ஜான் மகேந்திரன், லிஸ்ஸி ஆண்டனி மற்றும் கோபி கண்ணதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் ராங்கி திரைப்படத்தில் நடித்துள்ளனர். KA. சக்திவேல் ஒளிப்பதிவில், M.சுபாரக் படத்தொகுப்பு செய்ய C.சத்யா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ராங்கி திரைப்படத்தின் பனித்துளி பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான அந்த வீடியோ இதோ…