தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும் தென்னிந்திய திரை உலகில் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் திகழும் நடிகை த்ரிஷா நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ராங்கி திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. AR.முருகதாஸ் கதை எழுதிய ராங்கி படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

எங்கேயும் எப்போதும் & இவன் வேற மாதிரி படங்களின் இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படத்தில் அனஸ்வரா ராஜன், ஜான் மகேந்திரன், லிஸ்ஸி ஆண்டனி மற்றும் கோபி கண்ணதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். KA. சக்திவேல் ஒளிப்பதிவில், M.சுபாரக் படத்தொகுப்பு செய்ய ராங்கி C.சத்யா இசையமைத்துள்ளார்.

இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் பேசிய நடிகை திரிஷா ராங்கி திரைப்படம் குறித்தும் தனது திரையுலக பயணம் குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் இருவரில் யார் நம்பர் ஒன் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்டபோது,

“நான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே அவர்கள் வெற்றியாளர்கள் இல்லையா.. எனக்கு அப்போதே தோன்றவில்லை. ஒரு சாதாரண பார்வையாளராக தான் பார்க்கிறேன். தோராயமாக ஒரு திரையரங்கில் இருந்து வரும் ரசிகரை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் ஒரு சந்தோஷத்திற்காகவே படம் பார்க்கிறார். இங்கே ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன. ஆனால் இந்த நம்பர் ஒன் விளையாட்டெல்லாம் நாம் உருவாக்கியது. எனவே இதில் நான் எப்படி யார் நம்பர் ஒன் என தெரிவிக்க முடியும். இருவருமே பெரிய சூப்பர் ஸ்டார்கள்" என த்ரிஷா தெரிவித்துள்ளார். மேலும் இருவருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் பல சுவாரசிய தகவல்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…