இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக என்றென்றும் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் குடியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்தின் SPECIAL GLIMPSE வீடியோ சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளன்று வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பாபா திரைப்படம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புது பொலிவுடன் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரீ-ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளியான பாபா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்த தலைமுறை ரசிகர்களும் விரும்பும் வகையில் படத்தின் நீளம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு பாபா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் ரீ-ரிலீஸில் வெற்றி பெற்றுள்ள பாபா திரைப்படத்தை ரசிகர்கள் விருந்து வைத்து கொண்டாடியுள்ளனர். திருச்சியில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள், பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றியை பிரியாணி விருந்து போட்டு கொண்டாடியுள்ளனர்.