சதுரங்க வேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று படங்களால் தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் இயக்குனராக முத்திரை பதித்த இயக்குனர் H.வினோத் தனது அடுத்த அடுத்த படங்களில் அஜித் குமார் அவர்களுடன் இணைந்தார். முன்னதாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து H.வினோத் - அஜித்குமார் கூட்டணியில் மூன்றாவதாக தயாராகி இருக்கிறது துணிவு திரைப்படம்.

போனி கபூர் தயாரிப்பில், ரீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற 2023 ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள துணிவு படத்தில் சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனசந்திரன், ஜான் கொக்கென், பிக் பாஸ் பாவணி, அமீர், மமதி சாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த GM.சுந்தர் வலிமை படத்தை தொடர்ந்து துணிவு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் துணிவு படப்பிடிப்பு குறித்த பல சுவாரசிய தகவல்களை நடிகர் GM.சுந்தர் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் படக்குழுவினர் தங்கி இருந்த இடத்தில் இருந்து ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 60 ல் இருந்து 70 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்  தினமும் காலையில் அஜித் குமார் சைக்கிளில் வருவார் என்று தெரிவித்த GM.சுந்தர் துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது மறக்க முடியாத நினைவு குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

“படப்பிடிப்பின் போது ஒரு முறை அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக கேட்டிருந்தேன் அவரும் சம்மதித்திருந்தார். ஆனால் அன்றைய படப்பிடிப்பு நிறைவடைந்து நேரம் ஆனதால் அஜித் சார் கிளம்ப வேண்டும் என நானும் கிளம்பி விட்டேன். நான் கிளம்பி செல்லும் சமயத்தில் திடீரென ஒருவர் அழைத்து அஜித் சார் உங்களை கூப்பிடுகிறார் புகைப்படம் எடுக்க வேண்டும் என சொல்கிறார் என்றதும் உடனடியாக எனது வாகனத்தை நிறுத்திவிட்டு நான் ஓடினேன். அவர் வேண்டுமென்றால் நாளை எடுத்துக் கொள்ளலாம் என சொல்லி இருக்கலாம் ஆனால் இன்று சொன்னதை இன்றே எடுக்க வேண்டும் என அவர் நினைத்து செய்தார்” என GM.சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசிய தகவல்கள் பகிர்ந்து கொண்ட GM.சுந்தரின் நந்த முழு பேட்டி இதோ…