தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சதீஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய சதீஷ், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து இது குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் சதீஷ் வெளியிட்டிருந்தார்.

உலக அளவில் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையான நடிகை சன்னி லியோன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கலகலப்பான காமெடி ஃபேன்டஸி அட்வென்ச்சர் த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் R.யுவன் எழுதி இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் சன்னி லியோன் உடன் இணைந்து சதீஷ், தர்ஷா குப்தா, யோகிபாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

VAU மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் D.வீரசக்தி மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் K.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்கு தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில் அருள்.E.சித்தார்த் படத்தொகுப்பு செய்ய ஜாவத் ரியாஸ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தரண் குமார் பின்னணி இசை சேர்த்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என PAN INDIA திரைப்படமாக ஓ மை கோஸ்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய நடிகர் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா ஓ மை கோஸ்ட் திரைப்படம் குறித்தும், தங்களது திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில் இசை வெளியீட்டு விழாவில் கிளம்பிய சர்ச்சைக்கு பிறகு உங்கள் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் - உங்கள் நட்பில் விரிசல் ஏதாவது ஏற்பட்டதா..? என கேட்டபோது, “உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அந்த சம்பவத்திற்கு பிறகு தான் நாங்கள் இன்னும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். நான் அவருடைய பர்சனல் விஷயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன். அவருடைய கஷ்டங்களை தெரிந்து கொண்டேன். அவர் என் வீட்டில் மனைவியிடம் சந்தித்து பேசினார். நான் அவருடைய அம்மாவிடம் பேசினேன் எனவே நாங்கள் இதை ஒரு பாசிட்டிவான விஷயமாக தான் பார்க்கிறோம்" என சதீஷ் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து இந்த நிகழ்விற்கு பிறகு இது குறித்து தொடர்ந்து வரும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, “அது எப்போதும் இருக்கிறது தான்… எனக்கு மட்டுமல்ல CM,PM, சூப்பர் ஸ்டார் என அனைவருக்குமே நெகட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எந்த ஒரு விஷயத்திற்குமே 100 நல்ல கமெண்ட்கள் வரும் ஆனால் அதில் ஏதாவது ஒரு நெகட்டிவ் கமெண்ட் வந்தால் அதுதான் நம்மை மிகவும் பாதிக்கிறது. எனவே நான் அதை எடுத்துக் கொள்வதில்லை. தளபதி விஜய் அவர்கள் சொன்னதை தான் FOLLOW செய்கிறேன். அவர் சொன்ன IGNORE NEGATIVITYஐ பின் தொடர்கிறேன்.” என நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட சதீஷ் மற்றும் தர்ஷா குப்தாவின் சிறப்பு பேட்டி இதோ…