தூள் கிளப்பும் சாதனையை நிகழ்த்திய அரபிக்குத்து பாடல் !
By Aravind Selvam | Galatta | March 15, 2022 11:27 AM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.
செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது.
சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார்.பாடல் வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன் நெல்சன்,அனிருத்,சிவகார்த்திகேயனுடன் போனில் விஜய் பேசுவது ப்ரோமோ வெளியிடப்பட்டு ஹிட் அடித்தது.இந்த பாடல் அடுத்து வெளியாகி இணையத்தில் சென்சேஷனல் ஹிட் அடித்து வருகிறது.பல சாதனைகளை இந்த பாடல் முறியடித்துள்ளது.
முதல் நாளில் 25 மில்லியன்,12 நாட்களில் 100 மில்லியன் என்று பல சாதனைகளை இந்த பாடல் படைத்து வருகிறது.தற்போது இந்த பாடல் 175 மில்லியனை கடந்து அதிவேகமாக இந்த சாதனையை செய்யும் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.